185
யாழில். 20 நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!
20 நாட்கள் தொடர் காய்ச்சல் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த நடராஜா அன்னலட்சுமி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியில் வசித்து வரும் தனது மகளின் வீட்டிற்கு கடந்த 07ஆம் திகதி சென்று இருந்த வேளை அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் காய்ச்சலுக்கு மருந்து எடுத்த பின்னர் , கடந்த 16ஆம் திகதி தனது சொந்த ஊரான ஊர்காவற்துறைக்கு சென்ற பின்னரும் காய்ச்சல் மாறாததால் , மீண்டும் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கடந்த 26ஆம் திகதி மாற்றப்பட்ட நிலையில் , வைத்தியசாலையில் நேற்றைய தினம் புதன்கிழமை (28.08.24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
யாழில். விஷ ஜந்து தீண்டியதில் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் விஷ ஜந்து தீண்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கைதடி வடக்கை சேர்ந்த இராசையா தர்மசேனன் (வயது 45) என்பவரே உயிரிழந்துள்ளார்.
காணியொன்றினை துப்பரவு செய்து கொண்டிருந்த வேளை விஷ ஜந்து இவரை தீண்டியுள்ளது. அதனை அடுத்து அவரை அங்கிருந்து மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
Spread the love