இன்று நள்ளிரவு முதல் இலங்கை எரிபொருட்களின் விலைகளை குறைப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அந்த வகையில் 344 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்
379 ரூபாயாக காணப்பட்ட ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் 317 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. 355 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 , லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் இல்லை.
இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்திற்கு சமமாக தமது எரிபொருட்களின் விலைகளிலும் திருத்தம் செய்துள்ளதாக ஐ.ஓ.சி நிறுவனமும் சினோபெக் நிறுவனமும் அறிவித்துள்ளன.