126
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் யாழ்ப்பாணத்தில் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை பிரசார கூட்டம் நடைபெற்றது. பிரசார கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பிரசார கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதுடன் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
Spread the love