155
ஜேர்மன் நாட்டில் இருந்து தனது சொந்த ஊரான உடுப்பிட்டிக்கு, விடுமுறைக்கு வந்திருந்தவர், விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவரின் மனைவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த செல்வராசா சிவஞானம் (வயது 74) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நீண்ட காலமாக ஜேர்மன் நாட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விடுமுறையை கழிக்க தனது சொந்த ஊருக்கு திரும்பி இருந்தார். கடந்த சனிக்கிழமை மனைவியுடன் தனது உறவினர் வீட்டுக்கு சென்ற வேளை விபத்தில் சிக்கி இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
இருவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அவரது மனைவி தொடர்ந்தும் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
Spread the love