217
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்றைய தினம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட வழக்குகள் இன்றைய தினம் சாவகச்சேரி நீதிமன்றில் நீதிபதி அ.யூட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வைத்தியர் அர்ச்சுனா சுமத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை சாவகச்சேரி காவல்நிலையத்திலும் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்க தவறியமை, பிணை நிபந்தனைகளை மீறி செயற்பட்டமை காரணமாக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் பிணை ரத்து செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேவேளை கடந்த தவணையில், வைத்தியர்களின் பிணையாளிகள் மன்றில் நேரில் தோன்றி தம்மை பிணையாளிகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love