452
இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை அழைக்கும் உத்தரவு அடங்கிய இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் முதன்முறையாக ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
Spread the love