504
சிறுவர் தினத்தையொட்டி இதுவரை பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவையானது, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 04.00 மணி வரையில் நடைபெறவுள்ளது.
அதன் போது, சிறுவர்களுக்கான பிறப்புச் சான்றிதழை பதிவு செய்வதற்காக உரிய ஆவணங்களுடன் வருகை தந்து பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட் டுள்ளது.
Spread the love