933
உலக இருதய தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஒழுங்கமைத்த துவிச்சக்கர வண்டி ஓட்டும் விழிப்புணர்வு நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு சைக்கிள் ஓடுவது சிறந்த உடற்பயிற்சியாக அமையும் என்பதை எடுத்துரைக்கும் நோக்குடன் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையினர் தாதியர் பயிற்சி கல்லூரியினர் வட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் காவல்துறையினர் என பல அமைப்புக்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் நிகழ்வில் பங்கு பற்றினர்.
யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு போதனா வைத்தியசாலையில் ஆரம்பித்து பருத்தித்துறை வீதி வழியாக இருபாலை சந்தியை அடைந்து ஆசிரியர் கலாசாலை வாயிலின் ஊடாக உப்பு மடம் சந்தியை அடைந்து பின் காங்கேசன்துறை வீதி வழியாக சத்திரத்துச் சந்தியை அடைந்து மீண்டும் போதனா வைத்தியசாலையை அடைந்தது.
15 கிலோமீட்டர் தூரம் கொண்டதாக அமைந்து இத்துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
Spread the love