1.6K
மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பில் உள்ளதாக கூறப்படும் வாகனங்கள் தொடர்பான தகவல்கள் சரியான தகவல் அல்ல என மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட எழுத்துமூல பணிப்புரையின் பிரகாரம் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட 6 உத்தியோகபூர்வ வாகனங்களில் 3 வாகனங்களை கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவிக்கிறது.
Spread the love