அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் நேற்று (21) மாலை கட்டட வேலைக்காக கொட்டப்பட்ட மண்ணில் புதையுண்ட நிலையில் குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கட்டட வேலையில் ஈடுபட்டவர்கள் காவல்துறை அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட சம்மாந்துறை காவல்துறையினர் கைக்குண்டை குண்டு செயலிழக்கும் விசேட அதிரடி படையினர் மற்றும் குற்றவியல் தடயவியல் காவல்துறையினரை வரவழைத்துள்ளனா்.
மேலும் மீட்கப்பட்ட கைக்குண்டை அவ்விடத்தில் இருந்து அகற்றி செயலிழக்க செய்வதற்காக இன்று சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற கட்டளையை பெறுவதற்கான நடவடிக்கைகளை சம்மாந்துறை காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்