அரச சேவைகள் மற்றும் நாட்டை முழுமையாக எதிர்வரும் ஐந்து வருடங்களில் டிஜிட்டல்மயப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க திட்டமிட்டுள்ளதுடன், அதற்காக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரியவுக்கு முக்கிய பதவியை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலேசியா, இந்தோனேஷியா, கம்போடியா, நேபாளம், பங்களாதேஷ் உட்பட பல நாடுகளில் டிஜிட்டல் துறையில் பணியாற்றியவராக அனுபவம் கொண்டுள்ள கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, Dialog Axiata நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
இலங்கையின் தொலைத்தொடர்பு துறையில் முக்கிய நபராக உள்ள ஹான்ஸ் விஜயசூரியவை உத்தேச டிஜிட்டல் பொருளாதாரத்தை வழிநடத்த அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாகவும், இந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் விஜித ஹேரத், டிஜிட்டல் அமைச்சொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதற்கான அனுபவம் வாய்ந்த ஒருவரை நியமிக்க தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.