103
யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலால் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சிவாஸ்கர் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 22ஆம் திகதி சங்கானை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கிருந்து யாழ் . போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கு எலி காய்ச்சலே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக எலிக் காய்ச்சல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love