மாத்தறையில் உள்ள சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையமொன்றினை நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது 63 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அகங்கமவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
குறித்த சுற்றிவரைளப்பின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 9 மிமீ துப்பாக்கியின் ஐந்து தோட்டாக்கள், ஒரு வெல்டிங் இயந்திரம் மற்றும் பல்வேறு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டள்ளன.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் இரண்டு துப்பாக்கிகளை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளதனையடுத்து அவற்றினை கொள்வகவு செய்தவா்களை மாத்தறை காவல்துறையினா் கண்டுபிடித்து ஆயுதங்களுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 47 மற்றும் 54 வயதுடைய அஹங்கம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனத் தொிவித்துள்ள காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.