569
யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதில் , பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர்.
கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட கரந்தன் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தமிழ் மக்கள் கூட்டணியினர் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் அடக்கிய வன்முறை கும்பல் ஒன்று , பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் முரண் பட்டு அவர்களை தாக்கியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து சென்ற வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் , மீண்டும் 20க்கும் மேற்பட்ட நபர்களுடன் அவ்விடத்திற்கு வந்து , பிரச்சார பணிகளில் ஈடுபட்டிருந்த ஆண்கள் பெண்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
சம்பவத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில், அங்கிருந்து மீட்கப்பட்டு யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரான சட்டத்தரணி வி. மணிவண்ணன் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
Spread the love