98
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(3) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் நினைவு கூரப்படவுள்ள நிலையில் ,மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் குறித்த சிரமதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது மாவீரர்களின் கல்லறைகளுக்கு மலர் தூவி,சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் குறித்த சிரமதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
Spread the love