83
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் சடலத்தை பொறுப்பேற்குமாறு வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தர்மலிங்கம் வசந்தராஜன் (வயது 60) என்பவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுவரை அவரது சடலத்தை யாரும் அடையாளம் காட்டி பொறுப்பேற்கததால் , சடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் எதிர்வரும் 14 நாட்களுக்கு சடலத்தை அடையாளம் காட்டி பொறுப்பேற்குமாறு பிரதி பணிப்பாளர் கோரியுள்ளார்.
Spread the love