84
யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டடி பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞனே நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் .
யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , கொட்டடி பகுதியை சேர்ந்த இளைஞனை கைது செய்து சோதனையிட்ட போது அவரது உடைமையில் இருந்து 120 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து இளைஞனை கைது செய்த காவல்துறையினர் , காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Spread the love