213
தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு வந்த 09 இலங்கையர்களை நெடுந்தீவு காவல்துறையினா் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் மண்டபம் அகதி முகாமில் தங்கியிருந்த திருகோணமலை மன்னார் மற்றும் முல்லைத்தீவு , ஆகிய பகுதிகளை சேர்ந்த சிறுவர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் படகொன்றில் சட்டவிரோதமான முறையில் நெடுந்தீவை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் தொடர்பில் தகவல் அறிந்த நெடுந்தீவு காவல்துறையினா்அவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனைக்காக நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
Spread the love