899
யாழ்ப்பாணத்தில் தோட்டக் கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியை சேர்ந்தவரே நேற்றைய தினம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில் அவரது வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள தோட்டக் கிணற்றில் இருந்து நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love