Home இலங்கை பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு

பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு

by admin

 

முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.  கடந்த வருடம் செப்டெம்பர்  6ஆம் திகதி உயிா்த்த  ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில்   ஒளிபரப்பான   காணொளியில் முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும்  உயிா்த்த  ஞாயிறுத் தாக்குதலாளிகளுக்கு இடையே இடம்பெற்றதாக கூறப்படும் சந்திப்பு மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தொடர்பில் தகவல் வெளிப்படுத்தப்பட்டிருந்ததது.   சனல் 4 தொலைகாட்சி  குறித்த காணொளிக்கு  ‘ஸ்ரீ லங்கா ஈஸ்டர்ஸ் பொம்பிங் டிஸ்பெஜர்ஸ்’ எனப் பெயரிட்டிருந்தது.

2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை  ராஜபக்ஸக்களின் அரசியல் எதிரிகளை இலக்கு வைத்துத் துணை இராணுவ கொலை குழுவின் அங்கத்தவர்களை பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இணைத்துக் கொண்டதாக  சனல் 4 தொலைக்காட்சி வெளிப்படுத்தியிருந்தது.

இந்த காணொளியில் அடங்கும் சர்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகள் ஆரம்பித்துள்ளது.  இது தொடர்பிலான சமர்ப்பணங்களை நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் முன்வைத்துள்ள நிலையில், பிள்ளையான் இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More