Home இலங்கை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு தடுக்கப்பட்டுள்ளது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு தடுக்கப்பட்டுள்ளது

by admin

 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால்  இன்று செவ்வாய்கிழமை (12) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  ஊடகவியலாளர் சந்திப்பு தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் தடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும்  நாடாளுமன்ற தேர்தல் மட்டக்களப்பு வேட்பாளருமான பிள்ளையான எனப்படும்  சிவநேசதுரை சந்திரகாந்தனினால்  இந்த  ஊடகவியலாளர் சந்திப்பு அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேசிய ரீதியில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நாஷனல் ஸ்ரீலங்கா அமைப்பு  , மாவட்ட  உதவி தேர்தல்கள் தெரிவத்தாட்சி  அலுவலர் மற்றும் தேர்தல் பிணக்குகள் தீர்க்கும் பிரிவுக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம்  தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் குறித்த  ஊடகவியலாளர் சந்திப்பு தடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும்  நேற்று திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல்கள் சட்டங்களுக்கு முரணான வகையில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More