1.6K
மன்னார் மாவட்ட காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவு உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் தள்ளாடி சந்திக்கு அருகில் வைத்து மன்னார் மாவட்ட காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவு உத்தியோகத் தர்களால் கேரள கஞ்சா பொதியுடன் நேற்று (18) இரவு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 04 கிலோ 315 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா பொதி இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கள்ளி கட்டைகாடு பகுதியை சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.மன்னார் காவல்துறையினரின் விசாரணைகளின் பின் குறித்த சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love