486
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையை ஒட்டிய நாவலர் நினைவரங்கம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை இந்து மன்றத்தின் ஏற்பாட்டில் நாவலர் சிலை முன்றிலில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.
கலாசாலையில் அமைந்துள்ள நாவலர் திருவுருவச் சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டமையைத் தொடர்ந்து ஆசிரிய மாணவர்கள் நாவலரது வெவ்வேறு பணிகளை முன்னிலைப்படுத்தி உரையாற்றினர். இந்து மன்ற காப்பாளர் விரிவுரையாளர் கு பாலசண்முகன் நிறைவுரை ஆற்றினார். விஞ்ஞான நெறி ஆசிரியமாணவர் செந்தூர்ச்செல்வன் நன்றியுரை ஆற்றினார்.
Spread the love