151
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி கோடிக்கணக்கான பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை குற்றவாளியாக கண்ட மன்று பெண்ணுக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக இளையோரிடம் பணத்தினை பெற்று மோசடி செய்து வந்தமை தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பெண்ணை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்
விசாரணைகளில் , சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை மோசடியாக பெற்றமை , பண மோசடியில் ஈடுபட்டமை , அனுமதியின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராக அடையாளப்படுத்தி மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்டவை தெரியவந்துள்ளது.
பண கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் பெண்ணின் சொந்த கணக்கு இலக்கம் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றின் ஆதாரங்களுடன் பெண்ணை யாழ் , மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன.
அந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற விசாரணைகளில் பெண்ணை குற்றவாளியாக கண்ட மன்று , 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Spread the love