தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ்.சிறீபவானந்தராஜா காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
வைத்திய சாலை நிர்வாகத்தினருடன் வைத்தியசாலை சம்பந்தமாக கலந்துரையாடியதுடன் வைத்தியசாலையின் நிலைமை தொடர்பில் ஆராய்ந்தார்.
அத்துடன் வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவினரையும் சந்தித்திருந்தார்.
மேலும் வைத்தியசாலை வைத்தியர்களுடன் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறீபவானந்தராஜா காரைநகர் பிரதேசத்தில் அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான நடமாடும் மருத்துவ சேவையினை முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
அதேவேளை வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர்களுடன் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜா வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக பிறிதொரு நாளில் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்திருந்தார்.