Home இலங்கை யாழில். வீதிகள், கட்டடங்களை அமைக்கும்போது உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை!

யாழில். வீதிகள், கட்டடங்களை அமைக்கும்போது உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை!

by admin

வீதிகள் கட்டடங்களை அமைக்கும்போது உரிய விதிமுறைகளை பின்பற்றாமையும் குளங்களை தூர்வாருவது குறித்து கவனம் செலுத்தாமையுமே யாழ்ப்பாணத்தில் வெள்ளம் வழிந்தோடாமல் தேங்கி நிற்பதற்குக் காரணம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வெள்ள நிலைமைகள் குறித்து  பார்வையிட்டு ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

வெள்ள அனர்தத்தினால்  இடம்பெயர்ந்த மக்களை பார்வையிட்டோம். அவர்கள் சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை.

பலபகுதிகளில் வெள்ளம் வழிந்தோடாமல் நிற்கிறது. யாழ்ப்பாணத்தில் வெள்ளம் வழிந்தோட வழியின்றி தேங்கி நிற்பதற்கு காரணம், வீதிகளை உயரமாக அமைத்தமையே ஆகும்.

வீதிகளைப் புனரமைத்து மீண்டும் அமைத்தவேளை அவற்றை உயரமாக அமைத்துள்ளனர்.

அதேவேளை வீடுகளை, வர்த்தக நிலையங்களை அமைக்கும்போது விதிமுறைகளை மக்கள் பின்பற்றவில்லை.

குளங்கள் தூர்வாரவில்லை. வடிகால் அமைப்பு சிறந்த முறையில் இல்லை. பருத்தித்துறை வீதி இதற்கு ஓர் உதாரணம். அங்கு வடிகாலமைப்பு இல்லாத நிலை காணப்படுகிறது.

இவற்றுக்குத்தீர்வுகாண்பதற்கு நீண்டகாலம் எடுக்கும்.
வெள்ளநீர் வடிந்தோடுவதற்கு இடமில்லாத நிலை காணப்படுகிறது. இதனால் தற்போதைய நிலை இன்னும் ஓரிரு தினங்கள் நீடிக்கலாம். சில பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு நீடிக்கலாம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவது குறித்து அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்படுகிறது. தேசிய மக்கள் சக்தியும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.

பல்கலைக்கழக சமூகம், வர்த்தக சமூகம், லயன்ஸ் கழகம் உட்பட பல தரப்பினருடன் இணைந்து உதவிகளை வழங்கி வருகின்றோம்.

எனினும் இந்த உதவிகள் போதுமானதாகவையாக இல்லை. இதன் காரணமாக ஏனைய அனைவரும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வரவேண்டும்.

தற்போதைய சூழலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவுக்கு உதவிகளை வழங்கிவருகின்றோம். சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றோம்.

கூலி வேலைகளுக்கு செல்பவர்கள். அன்றாடம் உழைத்து உண்பவர்களின் நிலைமையே மிகவும் கஷ்டமானதாக காணப்படுகிறது. அவர்கள் உலர் உணவை கோருகின்றனார்.

சமூக நிறுவனங்கள் இவற்றை வழங்க முன்வரவேண்டும்,கிராம சேவகர்கள்,  மாவட்ட பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க முன்வரவேண்டும்.
குடிநீர் பிரச்சினை, குழந்தைகளுக்கான உணவுப் பிரச்சினை போன்றவையும் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.

சில இடங்களில் அதிகாரிகளின் அசமந்தப்போக்கை அவதானிக்க முடிகிறது. அதிகாரிகள் மக்களுக்கு முழுமனதோடு உதவ முன்வரவேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More