4.11.2024 தொடக்கம் 9.11.2024 ஆகிய தினங்களில் ‘ மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘ பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம்’ என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு ‘சமதை பெண்ணிலைவாத நண்பியர் குழுவினால்’ யாழ்ப்பாணம்இ முல்லைத்தீவுஇ கிளிநொச்சிஇ மன்னார்இ வவுனியா ஆகிய மாவட்டங்களில் விழிப்புணர்வு வீதிநாடகமானது போடப்பட்டது. இறுதியாக நாங்கள் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க மட்டக்களப்பு திருப்பெருந்துறையிலும் போடப்பட்டது.
பெண்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது இ ஏன் அவர்கள் அரசியலில் இல்லை இ இதுவரை காலமும் அவர்கள் எவ்வாறான சவால்களை சமூகத்தில் எதிர்கொண்டுள்ளார்கள் இ ஏன் பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் இ தங்களுக்கு ஏற்படும் சவால்களை அவர்கள் எவ்வாறு தமக்கேற்ற வெற்றிப்படிகளாக மாற்றுவார்கள் போன்ற பல தரப்பட்ட விடயங்களை நாங்கள் இந்த நாடகத்தில் முன்வைத்திருந்தோம். ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் அரசியல் என்றதையும் தாண்டி இப்போ வரைக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தான் வெளிப்படையாக சொல்லப்பட்டுள்ளது.
நாங்கள் வீதி நாடகத்தை அந்த இடங்களில் போட்டதிற்கு அப்பால் அங்குள்ள மக்களின் மனதில் இருந்து வந்த கருத்துக்களும்இ அவர்கள் ஒவ்வொருவரும் நாடகத்தை பார்வையிட்ட விதம் என்பன நாங்கள் கொண்டு சென்ற கருத்தை அவர்களிடம் சேர்ப்பதற்கு இலகுவாக இருந்தது. இந்நாடகமானது பெண்களை அரசியலில் ஊக்குவிக்கும் முகமாக எங்களால் முன்னெடுக்கப்பட்டது. பெண் என்பவள் வீட்டினுள் மட்டும் முடங்கிக்கிடக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆரசியல் என்றதையும் தாண்டி வெளி உலகிலும் தன்னை அடையாளப்படுத்த முற்று முழுதாக தடையாக இருக்காமல் அவளுக்கும் சற்று இடம் கொடுங்கள் என்பதை தெளிவு படுத்துவதாக எங்கள் வீதிநாடகம் அமைந்திருந்தது. பேண்களின் மேன்மையான வாழ்விற்கு அரசியல் தேவை. ஆனால் ஒரு பெண்ணின் வாழ்க்கை அதையும் தாண்டி பல சவால்களைக்கொண்டது. இந் நாடகம் அவை ஒவ்சொன்றையும் ஒவ்வொரு கதாபாத்தி;ரத்தின் குரலிநூடாக மிக துல்லியமாக வெளிப்படுத்தியது.
‘ அனர்த்தங்கள் இயற்கையையும்இ மனிதனையும் அழிக்க அழிக்க ஆக்கும் சக்திகளாக எத்தனையோ பெண்கள் இருக்கிறாங்கஇ இருந்து கொண்டே இருக்கிறாங்க’.
அதுமட்டுமல்லாமல் வீதி நாடகம் என்றதையும் தாண்டி பல அனுபவங்கள் எங்கள் அனைவருக்கும் கிடைத்தது. இந்நாடகத்துக்கான பயிற்சிகள் நேர்த்தியான முறையில் வழங்கப்பட்டன. மேலும் இவ்வீதி நாடகத்தின் சிறப்பம்சமாக இருப்பது வசந்தன் ஆட்டக்கோலமாகும்.அத்துடன் இந் நாடகத்தில் பாடப்பட்ட பாடல் வரிகளையும் குறிப்பிடலாம். இப் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் மிகவும் தத்ருபமனவை. இப் பாடல் வரிகள் திருமதி. கமலா வாசுகி அவர்களால் நுணுக்கமாக எழுதப்பட்டன.
அவை வருமாறு இ
‘ அதிகாரம் கொள்ளுவோர் நம் தலைவர்களில்லை உண்மை நேர்மை வாய்மை கொண்ட தலைவர்கள் தேவை
‘பார்த்துக்கொண்டேயிருந்தோம் அநியாயங்களை பார்த்துக்கொண்டேயிருந்தோம் – மாற்றங்களுக்காய் காத்துக்கொண்டிருந்தோமே பெண்கள் நாங்கள் காத்துக்கொண்டிருந்தோமே…..’ 👍🔥
‘ சமத்துவம் சமத்துவம் சமத்துவமாய் வாழ்ந்து காட்டுவோம்
வாழ்வோம் வாழ்வோம் வாழ்வோம் – உரிமை கொண்டு வாழ்வோம்
உரிமை கொண்டு வாழ்ந்து காட்டுவோம்’
குறுகிய காலப் பயிற்சியில் நிறைவான ஒரு கருத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளோம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம். துங்களுக்கு இருக்கின்ற அனைத்து வகையான தடைகளையும் தான்டி பெண்கள் சாதிக்க வேண்டும் என்பது எனது கருத்தாக இருக்கின்றது.
‘ வீட்டின் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்யும் பெண்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்வார்கள்’ என்பதும் இந்நாடகத்தில் கூறப்பட்ட உணர்வு ததும்பிய கூற்றாகும்.
இந்த வாய்ப்பினை எனக்கு ஏற்படுத்தி தந்த திரு. த. விவானந்தராசா விரிவுரையாளர் அவர்களுக்கும் இ அத்துடன் எங்களுக்கு பயிற்சிகளினை வழங்கி இ இந் நாடகத்தில் எங்களை இணைத்துக் கொண்ட சமதை பெண்ணிலைவாத நண்பியர் குழுவிற்கும் இ பேராசிரியர் சி. ஜெயசங்கர் அவர்கட்கும் இ திருமதி ஜெ. கமலா வாசுகி அவர்கட்கும் இ அண்ணாவியார் தேனூரான் ஐயா அவர்கட்கும் இ மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்திற்கும் இ எங்களுக்கு பக்கபலமாக இருந்த குடும்பத்தினருக்கும் இ என் நண்பர்களுக்கும் எங்கள் சமதை பெண்நிலைவாத நண்பியர் குழு சார்பாக உள்ளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.கலையால் மகிழ்வோம்….. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு……