126
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் அநாதரவான நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10.12.24) மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை கிராம கோட்டு பகுதியில் உள்ள மாதா சொரூபத்துடன் விபத்துக்கு உள்ளான நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் தொடர்பிலான தகவல்கள் தெரியாத நிலையில், பருத்தித்துறை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love