தமிழீழ விடுதலை இயக்கம் கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பா நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம் பலத்திற்கும் இடையில் இன்று (10) செவ்வாய்க்கிழமை இரவு கிளிநொச்சியில் அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.குறித்த சந்திப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,,,
விசேடமாக அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வர உத்தேசித்துள்ள இச் சூழ் நிலையில் குறித்த அரசியல் அமைப்பை உறுதியாக அறிவித்துள்ள நிலையில்,அதனை நாடாளுமன்றத்தில் எவ்வாறு எதிர் நோக்கப்போகின்றோம் என்ற விடையம் குறித்தும்,குறிப்பாக தமிழ் தேசிய மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும்,புதிய அரசியல் அமைப்புகொண்டு வரப்படுகின்ற சந்தர்ப்பத்திலே எங்களுடைய நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாடு,தொடர்பாகவும்கலந்து
நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போன்று நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் அவர்களுக்கு தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி நாங்கள் இக் கலந்துரையாடலை நடத்த வேண்டும் என்பதை நாங்கள் கேட்டு இருந்தோம்.