5
யாழ்ப்பாணத்தில் சுமார் 214 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அண்மித்த பகுதியில், இன்றைய தினம் காலை எரிபொருள் முடிவடைந்த நிலையில் படகொன்று கரையொதுங்கியுள்ளது.
படகு சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டமையால் அதனை புலனாய்வாளர்கள் சோதனையிட்ட போது , 92 பொதிகளில் 213. 899 கிலோ கிராம் கேரளா கஞ்சா படகினுள் காணப்பட்டுள்ளது.
அதனை அடுத்து, படகில் இருந்த இருவரையும் கைது செய்து , படகில் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்
Spread the love