33
யாழ்ப்பாணத்தில் 120 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறைப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொம்மைவெளி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை கைது செய்து சோதனையிட்ட போது , குறித்த இளைஞனிடம் இருந்து 120 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டது.
மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்ட இளைஞனையும் , மீட்கப்பட்ட போதை பொருளையும் யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Spread the love