142 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து “கிரீன் சனல்” ஊடாக வெளியேற முற்பட்ட கானா நாட்டுப் பெண்ணொருவரை, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று (29.12.24) அதிகாலை கைதுசெய்துள்ளனர். .
அவர் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கானாவில் வசிக்கும் 41 வயது பெண் என்றும் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டவர் என்றும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டோஹாவிலிருந்து கட்டார் ஏயார்வேஸ் விமானமானமான KR-658 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை 29 காலை 01.50 மணியளவில் சென்றடைந்தார்.
அவர் கொண்டு சென்ற 02 பயணப் பொதிகளில் 04 கிலோ 068 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றினர்.
பின்னர், குறித்த பெண்ணையும் அவர் கொண்டு சென்ற போதைப் பொருட்களையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.