Home இலங்கை சுண்ணக்கல் விவகாரம் – கனியவள திணைக்களத்திடம் அறிக்கை பெற்ற பின்னரே சட்ட நடவடிக்கை!

சுண்ணக்கல் விவகாரம் – கனியவள திணைக்களத்திடம் அறிக்கை பெற்ற பின்னரே சட்ட நடவடிக்கை!

by admin

யாழ்ப்பாணத்தில் சுண்ணக்கல்லுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனங்கள் தொடர்பில் கனிய வள திணைக்களத்தின் அறிக்கை பெறப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவற்துறை  மா அதிபர் காளிங்க ஜயசிங்க தெரிவித்தார்.

சாவகச்சேரி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனால் சோதனையிடப்பட்டு காவற்துறையினரால்  கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாவட்ட பிரதி காவற்துறை  மா அதிபர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சுண்ணக்கல் அகழ்வு என்பது காவற்துறையினருக்கு பொறுப்பான காரியம் அல்ல. அது கனிய வளங்கள் திணைக்களத்துடன் சம்பந்தப்பட்ட விடயம். இது தொடர்பில் கனிய வளங்கள் திணைக்களமே நடவடிக்கை எடுக்க வேண்டும். சில நாட்களுக்கு முன் சாவகச்சேரி காவல் நிலையத்தில் சுண்ணக்கற்களுடன் வாகனம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.

அதற்குரிய ஆவணங்கள், அறிக்கைகள் அனைத்தும் கனிய வளங்கள் திணைக்களத்திடம் பெற்றுக் கொண்டு விரைவில் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More