இமயமலையின் அடிவாரத்தில் உள்ள திபெத்தில் இன்று ( 7) காலை 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 53 பேர் உயிரிழந்துள்ளதுடன் 62 பேர் காயமடைந்திருப்பதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. . அத்துடன் நேபாள – திபெத் எல்லையில் மீண்டும் 4.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. திபெத்தின் டின்கிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கத்தினால் அப் பகுதியைச் சுற்றியுள்ள பல கட்டிடங்கள் இடிந்து விழுந்முள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை டெல்லி – என்சிஆர் மற்றும் பிஹார் தலைநகர் பாட்னா, மாநிலத்தின் வட பகுதிகள் உட்பட வட இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கும் உணரப்பட்டுள்ளது.