சூரிய மின்கலம் திருத்த வேலைக்கு வந்தவர்கள் என கூறி , வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருத்து தெளித்து சுமார் 12 பவுண் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை (27.01.25) சென்ற இருவர் , வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலத்தினை (சோலார் ) பழுது பார்க்க வந்துள்ளதாக கூறி பாசாங்கு செய்து , வீட்டில் இருந்தவர்கள் மீது மயக்க மருந்தினை தெளித்து , அவர்கள் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள், சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.