வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கத்துக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இதன்போது ஆரிசிய ஆலோசகர் சங்கத்தினரால் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்று கையளிக்கப்பட்டது.
அதில், களப்பணியில் ஈடுபடும் அவர்களுக்கு பொருத்தமான கொடுப்பனவு வழங்கப்படவேண்டும், சம்பள மாற்றியமைப்பு மற்றும் சம்பள உயர்வு சரியாகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், நீண்டகாலம் வெளிமாவட்டங்களில் பணியாற்றிய ஆசிரிய ஆலோசகர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட வேண்டும், காகிதாகி கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும், வாகனங்கள் வழங்கப்பட வேண்டும், வலயக் கல்வி அலுவலகங்களில் இடவசதி ஏற்படுத்தித் தரவேண்டும், வளவாளர்களை நியமிப்பதைவிடுத்து ஆசிரிய ஆலோசகர்களை நியமிக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகளையும் அழைத்து விரைவில் கலந்துரையாடல் நடத்துவதுடன் உடனடியாக எடுக்கக் கூடிய பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஆளுநர் பதிலளித்தார்.