தனியார் வங்கி ஒன்றின் தலைமையகத்தில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றும் ஒருவர், நாரஹேன்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
49 வயதான குறித்த நபரின் வீட்டில் இருந்து ஒரு மவுசர் 6.35 காலிபர் பிஸ்டல், 9 மிமீ தோட்டாக்கள் 400, மற்றும் 7.62 தோட்டாக்கள் 276 மற்றும் 0.22 தோட்டாக்கள் 100, 303 தோட்டாக்கள், 350 பன்னிரண்டு போர் தோட்டாக்கள், 25 போரா தசாயா தோட்டாக்கள், அத்துடன் 1 பெரென்டா, சாண்டா ஹாட்சன் எஸ்கார்ட், கிளாக் 19 ஜெனரல் செமி ஆட்டோ பீட்டல் உட்பட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் ஆகியன காவல்துறையால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துப்பாக்கிகளுக்காக பெறப்பட்ட நான்கு உரிமங்களைப் பொலிஸாரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், அந்த உரிமங்கள் சட்டப்பூர்வமாகப் பெறப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், சந்தேக நபர் ஒரு விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர் என்று கூறி ஒரு அடையாள அட்டையையும் காவல்துறையிடம் வழங்கியதாக, அந்த அதிகாரி மேலும் கூறினார்.