இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது பகுதியாக, 183 பாலஸ்தீன கைதிகள் விடுதலையாகவுள்ள வேளை, அதற்கு ஈடாக மூன்று இஸ்ரேலிய கைதிகளும் காசாவில் விடுவிக்கப்பட உள்ளனர்.
மனிதாபிமான உதவிகள் மற்றும் பிற முக்கிய பொருட்களைக் காசாவிற்குள் கொண்டு செல்வதைத் தடுப்பதன் மூலம் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் ஹமாஸ் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்தே கைதிகள் 5 ஆவது தடவையாகயும் விடுவிக்கப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தொடர்ந்தும் மீறினால், இடிபாடுகளுக்கு அடியில் 12,000க்கும் மேற்பட்ட சடலங்களில் சில இஸ்ரேலிய கைதிகளின் எச்சங்கள் இருப்பதால், அவற்றை ஒப்படைக்க முடியாமல் போகலாம் என்று ஹமாஸ் முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இஸ்ரேல் பளு அதிகமான உபகரணங்கள் என்கிளேவ் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கிறது என்று காசா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.