யாழ்ப்பாண நகரில் உள்ள உணவகம் ஒன்றில் இளைஞன் ஒருவரை அடித்த சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்டதாகக் கூறி இளைஞன் ஒருவர் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அந்த இளைஞரே தன்மீது தாக்குதல் மேற்கொண்டதாக அர்ச்சுனா தெரிவித்திருந்தார். ஆனால், அந்த உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராவில் இந்த நிகழ்வு பதிவாகியுள்ளது.
ஒரு காணொளி தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதை அடுத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளமை அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராவில் பதிவாகி இருந்தது. இதை அடிப்படையாக வைத்து தற்போது அர்ச்சுனாவுக்கு எதிராகக் காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.