உயிருடன் இருக்கும் 3 கைதிகளைக் ஹமாஸ் இயக்கமானது சனிக்கிழமை விடுவிக்கவில்லையெனில் பாலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேலானது மீண்டும் போருக்குத் திரும்பும் என்று இஸ்ரேலின் அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்த உடன்படிக்கையை இஸ்ரேல் மீறியதாகக் கூறிக் கைதிகள் பரிமாற்றத்தை ஒத்திவைத்த பின்னரும் தாம் திட்டமிட்டபடி மூன்று இஸ்ரேலிய கைதிகளை சனிக்கிழமை விடுவிக்கவுள்ளதாகக் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
கனரக எந்திரங்களை காசாவிற்கு எடுத்துச் செல்வதைத் தடுத்தல் அடங்கலான இஸ்ரேலின் காசா மீதான தடைகள் குறித்து எகிப்தினதும் கட்டாரினதும் மத்தியஸ்தத்தில் எகிப்தின் தலைநகரம் கெய்ரோவில் ஹமாஸ் பேச்சுகளில் ஈடுபட்டது.
காசா மீதான இஸ்ரேலின் போரில் 48,239 பேர் இறந்துள்ளதாகவும், 111,676 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்க ஊடக அலுவலகமானது இறப்பு எண்ணிக்கையை 61,709 ஆக இற்றைப்படுத்தியுள்ளது. இடிபாடுகளுக்கு அடியில் காணாமல் போன ஆயிரக்கணக்கானோர் இப்போது இறந்துவிட்டதாகக் கருதப்பட்டே இந்த இறப்பு எண்ணிக்கை இற்றைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.