தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் சகோதரர், விபத்து தொடர்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (14/2/2025) காலை, கொஸ்வத்த – ஹல்ததுவன பிரதேசத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல், நாடாளுமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி,நாடாளுமன்ற உறுப்பினரின் மகிழுந்தானது வீதியை விட்டு விலகி எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார்.
வாகனத்தின் சாரதியான நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரர் கொஸ்வத்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.