120
உடல்நலக் குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (78) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியாகாந்தி அனுமதிக்கப்பட்டு, தற்போது வைத்தியா் குழுவின் கண்காணிப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் இன்று (வெள்ளிக்கிழமை) அவர் வீட்டுக்கு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Spread the love