Home இலங்கைவித்தியா கொலை வழக்கு- பிரதான சந்தேக நபரைத் தப்பிச் செல்ல உதவிய காவல்மா அதிபருக்கு கடூழிய சிறைத்தண்டனை

வித்தியா கொலை வழக்கு- பிரதான சந்தேக நபரைத் தப்பிச் செல்ல உதவிய காவல்மா அதிபருக்கு கடூழிய சிறைத்தண்டனை

by editorenglish

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேகநபரை ஆரம்பத்தில் விடுவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (20/2/2025) தீர்ப்பை வழங்கியது.

இதற்கு மேலதிகமாக, லலித் ஜயசிங்கவுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அதை அவர் செலுத்தத் தவறினால், அவருக்கு மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், புங்குடுத்தீவை சேர்ந்த பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா, 2015 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கொலைக் குற்றவாளிகள் ஏழு பேருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More