சூடானில் இராணுவ விமானம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 46 பேர் உயிாிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர். ஓம்துர்மான் நகருக்கு கிழக்கே உள்ள . கராரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு ஒன்றின் மேல் விமானம் மோதி வெடித்து விபத்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதில் விமானத்தில் பயணித்த இராணுவ வீரர்கள் மற்றும் வீிமானம் விழுந்த பகுதியிலிருந்த பொதுமக்கள் உட்பட 46 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதாக அந்நாட்டு அரச அதிகாரிகள் இன்று (26) தெரிவித்துள்ளனா்.
சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு நாடாளுமன்ற படைகளுக்கும், ராணுவ படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் இருந்து உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. இதனால் நாடு முழுவதிலும் பாலியல் வன்கொடுமைகள், திட்டமிட்ட இனப்படுகொலைகள் உள்ளிட்ட போர் குற்றங்கள் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது