எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கு பயணத்தை மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 6 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு இந்தியாவிலிருந்து உயர்மட்ட பாதுகாப்பு குழுவொன்று தற்போது இலங்கை சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
கொழும்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி உட்பட்டோரை சந்திக்கவுள்ள இந்திய பிரதமர், சம்பூருக்கு உலங்குவானூர்தியில் சென்று மின்திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதேபோல அனுராதபுரம் ஸ்ரீ மகாபோதிக்கு சென்று வழிபாடுகளிலும் அவர் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.