33
யாழ்ப்பாணத்தில் சுமார் 84 கிலோ கிராம் கஞ்சா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23.03.25) மீட்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு, க்கு அண்மித்த பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கஞ்சா போஆழியவளை கடற்கரையில் போதைப்பொருட்கள் பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் கஞ்சா பொதிகளை மீட்டனர்.
மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் சுமார் 84 கிலோ எனவும், சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தாக காவற்துறையினர் தெரிவித்தனர்
இதேவேளை நேற்றைய தினம் வடமராட்சி மூர்ககம் கடற்கரைக்கரைக்கு அண்மித்த பகுதியில் இருந்து சுமார் 338 கிலோ கஞ்சா பொதிகள் மற்றும் படகு, அதற்கான வெளியிணைப்பு இயந்திரம் உள்ளிட்டவை மீட்கப்பட்ட போதிலும் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love