நிகழும் குரோதி வருடம் பங்குனி ஆயிலியநாள் (07. 04. 2025) திங்கட்கிழமை எங்கள் குருநாதன் யோகசுவாமிகளது குருபூசை நாள். அன்று முற்பகல் 09.30 மணி முதல் சிவதொண்டன் நிலையத்துப் புராணமண்டபத்தில் யோகர் சுவாமிகளது திருமேனிக்கு திவ்யமான அபிடேக ஆராதனை நிகழும். நண்பகற்போதில் மாகேசுரபூசை நிகழும்.
சிவதொண்டன் நிலையத்தில் குருபூசைக்கு முந்திய மூன்று நாட்களும் 04. 04. 2025, 05. 04. 2025, 06. 04. 2025 வழமை போன்று ஆச்சிரம வாழ்வு நாட்களாக அனுட்டிக்கப்படும். இந்நாட்களில் நற்சிந்தனை முற்றும் ஓதி நிறைவு செய்யப்படும.
இந்நிகழ்வுகளிலெல்லாம் அன்பர்களைக் கலந்து கொண்டு சுவாமிகளின் திருவருளைப்பெற்றேகுமாறு ஆதரம் பெருக அழைக்கின்றோம்.
‘குருபக்தியே பெரும் பேறு கொண்டாடிக் கொண்டாடி ஆறு’
சிவதொண்டன் சபையினர்
434 கே.கே.எஸ் வீதி
யாழ்ப்பாணம்
தொ.பே:- 021 222 2799