மோட்டார் சைக்கிள் விபத்தில் தாதியர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாதியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடமைபுரியும், சித்தங்கேணி பகுதியை சேர்ந்த ரவீந்திரன் கிருஷ்ணவேணி (வயது 52) என்ற தாதியரே உயிரிழந்தள்ளார்.
கடந்த 26ஆம் திகதி இரவு கடமைக்காக மோட்டார் சைக்கிளில் தெல்லிப்பழை வைத்தியசாலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை விளான் சந்தியில் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த தாதிய உத்தியோகஸ்தரை தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , அங்கு சிகிச்சை பெற்று வந்தார்
அந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
நாக பாம்பை பிடிக்க முற்பட்டவர் பாம்பு தீண்டி உயிரிழப்பு!
வெற்று கைகளால் நாக பாம்பினை பிடித்து, பாம்பினை காப்பாற்ற முயன்றவர் பாம்பு தீண்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புத்தூர், சிவன் கோவில் வீதியைச் சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் சர்மா என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இரவு, இவரது வீட்டின் முற்றத்தில் காணப்பட்ட வலைகளுக்குள் நாக பாம்பு ஒன்று சிக்கி தவித்துக்கொண்டிருந்ததை அவதானித்து , வலைகளுக்குள் சிக்கி இருந்த நாக பாம்பினை வெற்று கைகளால் பிடித்து காப்பாற்ற முற்பட்ட வேளை பாம்பு அவரை தீண்டியுள்ளது.
அதனை அடுத்து , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
வயிற்றோட்டம் காரணமாக பிறந்து 43 நாட்களேயானா குழந்தை உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் வயிற்றோட்டம் காரணமாக பிறந்து 43 நாட்களேயானா குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.