121
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்றையதினம் மிகச் சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் நடைபெற்றது.
ஆலய பிரதம குரு இரத்தினசபாபதி குருக்கள் தலைமையில் கிரியை வழிபாடுகள் நடைபெற்றது.
ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் குறித்த கும்பாபிஷேக விழாவில் பல்வேறு ஆதீனங்களின் குரு முதல்வர்களும் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தில் தாயகத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் வருகைதந்த பலரும் கலந்துகொண்டனர்.
Spread the love