Home இலங்கைமூதூர் மத்திய கல்லூரியில், ஒல்லாந்தர் காலத்து நாணயம் கண்டெடுப்பு

மூதூர் மத்திய கல்லூரியில், ஒல்லாந்தர் காலத்து நாணயம் கண்டெடுப்பு

by admin

 

திருகோணமலை மூதூர் மத்திய கல்லூரியில், ஒல்லாந்தர் காலத்து வீஓசி (  VOC ) என்ற நாணயம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவன் ஒருவரினால் பாடசாலை பிரதான வாயில் முன்னால் குறித்த நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, மூதூர் மத்திய கல்லூரி அமைந்துள்ள இடத்தில், இலங்கையில் ஒல்லாந்தர்களின் முதலாவது கோட்டை அமைக்கப்பட்டிருந்தது என்பதை, இந்நாணயக் கண்டுபிடிப்பும் ஊர்ஜிதப்படுத்துவதாக வரலாற்று ஆய்வாளரும், கல்லூரியின் பிரதி அதிபருமான ஜனாப்.எஸ்.எம்.பிஸ்ரி தெரிவித்துள்ளார்.

வீஓசி (VOC ) என்பது ஒல்லாந்தர் கால ‘கிழக்கிந்திய கம்பனி’ எனும் பெயரைக் குறிக்கும் சுருக்கக் குறியீடாகும். இந் நாணயத்தில் 1750 ஆம் ஆண்டு என பொறிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More